மகராஜியின் உரைகளிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவை
என்னைப் பொருத்தவரையில்
நீங்கள் உயிரோடு இருப்பதுதான் உண்மையிலேயே மாபெரும் அன்பளிப்பு. அதை
விட மேலான அன்பளிப்பு அதை புரிந்துகொள்வதாகும். அப்பொழுதுதான்
நன்றியுணர்தல் மலர தொடங்கும். இந்த வாழ்வில் இன்புறுங்கள் காரணம்
உங்களால் இன்புற முடியும். கொண்டாடுவதற்கு உண்மையான காரணம்
இருக்கிறது. அதை நிஜமான ஒரு கொண்டாட்டமாக இருக்கவிடுங்கள். அது
எதார்த்தமாக கொண்டாடப்படும் ஒன்றல்ல, ஆனால் அவசியமாக கொண்டாடப்பட
வேண்டிய ஒன்று.
- அமாரூ 25 ஏப்ரல் 2001
மிகவும் இன்பமளிக்ககூடிய
மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு கதை இருக்கிறது. இது ஆனந்தம் அரவணைக்கப்பட்டு,
நிறைவு ஏற்பட்ட ஒரு ஜீவனின் கதை. விழிப்புணர்வும் உண்மையான அன்பும்
அரவணைக்கப்பட்ட ஓர் உன்னதமான கதை. கதை சொல்பவர் ஒருவர் இருக்கிறார். அவர்
கதையை சொல்வதோடு மட்டுமல்லாமல் அக்கதையை உங்களுக்கு நிஜமானதாக்குகிறார்.
- மயாமீ பீச் 12 மே 2001
பாலைவனத்தில் அலைந்து கொண்டிருக்காதீர்கள்.
சோவைவனம் நிறைந்து உங்கள் இல்லத்திற்கு திரும்புங்கள். இல்லம் எப்பொழுதுமே
உங்கள் உள்ளேதான் இருந்து வருகிறது. அளவில்லா ஆனந்தத்தை அடையக்கூடிய ஆற்றல்
உங்களிடம் இருக்கிறது என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஆம்.
துன்பமும் இருக்கும். ஆனால், அதன்பிறகு மீண்டும் இன்பத்தை அங்கு நிலவ
விடுங்கள். உங்கள் உள்ளத்தை எங்கோ ஒரு மூளையில் ஒதுக்கிவைத்து விடாதீர்கள்.
அது உங்கள் உள்ளே குதூகலத்தோடு ஜொலித்து கொண்டிருக்க வேண்டும். வீட்டிற்க்கு
வாருங்கள். கொண்டாடுங்கள்.
- வெர்சைலிஸ் 27 மே 2001
நம் ஒவ்வொருவர் உள்ளேயும் ஒரு
பிரபஞ்சம் இருக்கிறது. இந்த அன்பளிப்புதான் நம்முள்ளே இருக்கும்
நட்சத்திரங்களை பார்ப்பதற்கான தூரதரிசினி. நம்முள்ளே ஒரு சமுத்திரம்
இருக்கிறது. அதில் மூழ்குங்கள். இந்த அன்பளிப்புதான் மூழ்க உதவும்
கருவி.
பரந்த வானம் நம்முள்ளே இருக்கிறது. ஞானவழிமுறை எனும் இறக்கையை
கொண்டு பறந்து செல்லுங்கள்.
லவால், கெனடா 14 ஜூன் 1999
இணையத்தளங்கள